செங்குன்றம், அக். 27– தமிழர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிற “இதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி, இதுதான் திராவிடம் – திராவிடல் மாடல் ஆட்சி “என்ற தலைப்பின் சார்பில் நடைபெறுகிற கூட்டத்தை சிறப்பாக நடத்த சோழவரம், மற்றும் புழல் ஒன்றிய சார்பாக கலந்துரையாடல் கூட்டம் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர் புழல்.த ஆனந்தன் தலைமை ஏற்று பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் புழல் நகர தலைவர் புழல் சோமு, புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார், பொதுக்குழு உறுப்பினர் ந. கஜேந்திரன், மாவட்ட துணை தலைவர், புழல் க. ச. க இரணியன், தோழர் பாலு, கும்முடிப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஓவியர் ஜனாதிபதி, மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி.
