பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக மேனாள் ஒன்றிய மகளிரணிச் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி ஆ.திலகவதியின் 11ஆம் ஆண்டு (28.10.2014 – 28.10.2025) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
வீ. ஆத்மநாதன்- துணைவர் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாவட்ட தலைவர், ஆதி உதயம் – மகள் (வலு தூக்கும் வீராங்கனை), சுரேஷ் -மருமகன் ( பொறியாளர் மின்னணு – மின்னணுவியல் பொறியியல் – ஒசூர்), சு.உ.தீப்சிகா செட்டி – பேத்தி
வருந்துகிறோம்

மதுரை கல்வி வள்ளல் பே.தேவசகாயம்-அன்னத்தாயம்மாள் ஆகியோரின் மருமகனும் தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா அவர்களின் மைத்துனருமான எம்.ராஜகோபால் (வயது 76) (26-10-2025) ஞாயிறு காலை 6மணிக்கு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவர்களின் மனைவி தமிழ்மணி, மகன் ஈரோட்டுப்பெரியார், மகள்கள் அன்புமணி, அறிவுமணி, மதிமணி ஆகியோர் ஆவர். தகவல் அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்மணி அவர்களிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார். அன்னாரின் மகன் ஈரோட்டுப் பெரியார் அவர்களிடம் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் இரங்கல் தெரிவித்தார். மாலை 7 மணிக்கு அவனியாபுரம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
