டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
* தெரு நாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!தெரு நாய்கள் விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 75,000 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்; திமுக, கூட்டணிக் கட்சிகள் எச்சரிக்கையாக உள்ளன. புகார்கள் அல்லது சந்தேகங்களுக்கு இடமளிக்காமல் நியாயமான மற்றும் வெளிப்படையான செயல் முறைக்கு வலியுறுத்தியுள்ளன.
தி இந்து:
* ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ரகசியத் திட்டப்படி அதானி குழுமத்தில் எல்அய்சி ரூ.33,000 கோடி முதலீடு: அமெரிக்கப் பத்திரிகையின் அறிக்கையால் பரபரப்பு; மக்கள் சேமிப்பில் முறைகேடு நடப்பதாக காங். குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தை முன்னேற்றும் அதே வேளையில் பீகாரை புறக்கணிப்பதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை “வெளியாட்களிடம் இருந்து” மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு போர் என பிரகடனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகார், ஜார்கண்டில் நடந்த சாத் திருவிழாவின் போது 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்
– குடந்தை கருணா
