மாணவர்களுக்கு இலவசமாக பெரியார் பயிலகம் அமைக்கப்படும் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், அக். 26- திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 25.10.2025 அன்று மாலை 5.30 மணியளவில் சாம நகர் மாவட்டத் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு  கே. சி எழிலரசன் மாவட்டத் தலைவர் தலைமை வகித்தார். பெ. கலைவாணன் மாவட்டச் செயலாளர் வரவேற்றார்.

இக் கூட்டமானது நடந்து முடிந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் சமூக காப்பு அணியில் திருப்பத் தூர் மாவட்டம் சார்பில் பங் கேற்று  கழகத்தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் முன்பு அணிவகுப்பு மரியாதை செய்து சிறப்பித்த கழகத் தோழர்கள் இராஜேந்திரன், அன்பு, சந்துரு, ஜெயசூர்யா, துருவன், சுரேந்தர், அஜித், தர்ஷினி ஆகியோருக்கு  பாராட்டுதல் தெரிவித்து சிறப்பிக்கப்பட்டது.

பெரியார் சமூகக் காப்பு அணியில் பங்கேற்ற தோழர்களுக்கு  ரோட்டேரியன் பி.கணேஷ்மல்  காமராஜர் அறக்கட்டளை தலை வர் பயனாடை அணிவித்தார். எம்.ஞானம் ஆசிரியர் அவர்கள் எழுதிய பெரியார் ஒரு சகாப்தம் நூலையும், மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் இணைந்து கருப்பு “டிசர்ட்”  வழங்கியும் சிறப்பித்தார்கள்.

பெரியார் சமூகக் காப்பு அணியில் பங்கேற்ற  தோழர்கள் அனைவரும் பெரியார் சமூகக் காப்பு அணிக்கு செல்வதற்கு முன்பும், சென்ற வந்த பிறகும் தங்களுக்குள் ஏற்பட்டமாற்றங்கள் குறித்து பேசினார்கள்.

இந்த பயிற்சிப் பட்டறை மனதளவிலும், உடலளவிலும் எங்களை உறுதி ஆக்கியுள்ளது. தொடர்ந்து தந்தை பெரியார் பாதையில் பயணிப்போம் என்று தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.

இக் கூட்டத்தில் எம்.ஞானம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்), எம்.என்.அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்) மற்றும் அண்ணாசரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர், கே.சி.எழிலரசன் மாவட்டத் தலைவர் ஆகியோர் சமூ கக் காப்பு அணியில் பங்கேற்ற தோழர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு ரையாற்றினார்கள்.

முன்னதாக சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபாலின் மூத்தமகன் நகர மேனாள் தலைவர், நகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஏ.டி.கவுத மன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இக் கூட்டத்தில் 23.10.2025 அன்று நடைபெற்ற செயற்குழுவில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க பெரியார் உலகிற்கு திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பில் பெரும் நிதியை திரட்டித் தருவது. அப்பணியை துரிதமாக ஆரம்பிப்பது என்றும், மாவட்ட கழக அலு வலத்தின் அருகில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பெரியார் பயிலகம் விரைவில் துவங்கபடும், தந்தை பெரியார் அமைப்புச்சாரா கட்டுமானத் தொழிலாளரணி அலுவலகம் திறப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கழக நகர இளைஞரணி அமைப்பாளர் அரவிந்த்-கீதா வாழ்விணையராக இணைந்து பத்தாம் ஆண்டில் பயணிக்க உள்ள அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து சிறப்பிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடல் கூட்டத்தில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கமலம்மாள்,  எ. அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி)  விஜயா அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர் மகளிரணி) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி) தங்க அசோகன் (மாவட்ட காப்பாளர்) பெ. ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றியத்தலைவர்) கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) இரா. நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர்) சரவணன் (லக்கிநாயக்கன்பட்டி ஒன்றியத் தலைவர்) சந்தோஷ் (காக்கங்கரை ஒன்றியத் தலைவர்) இராஜேந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) பிரபாகரன் (கற்பி பயிலகம்) மற்றும் ஏராளமான கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இறுதியாக காளிதாஸ் நகர தவைவர் நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *