வாஷிங்டன், அக்.26- கரீபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்களின் தாக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளை இலக்காக கொண்டு தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டு உள்ளன. புயல் தொடர்ச்சியாக, ஹைதியில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 2 பேர் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள். மற்றொருவர் மேரிகாட் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிக்கி பலியானார்.
இதேபோன்று, ெடாமினிகன் குடியரசு நாட்டில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால், மெலிஸ்சா புயலால் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. மற்றொருவரை காணவில்லை. அவரைத் தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புயலானது மணிக்கு 5 கி.மீ. என்ற வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், வடக்கு கரீபியன் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
ஜமைக்கா மற்றும் ஹைதியின் தென்பகுதிகள் மற்றும் ெடாமினிகன் குடியரசு ஆகிய நாடுகளில் நாளை முழுவதும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை 64 செ.மீ. வரை மழை பெய்யலாம் என்று தெரிகிறது. இதனால், பேரிழப்புகளை ஏற்படுத்த கூடிய வெள்ளமும் ஏற்படும் சாத்தியம் உள்ளது என தேசிய புயல் மய்யத்தின் துணை இயக்குநர் ஜேமீ ரோம் கூறினார்.
கனடாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் – காரணம் என்ன?
வாஷிங்டன், அக்.26- அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதுமுதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இந்தியா, சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார். அந்த வகையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பால் அமெரிக்கா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, வரி விதிப்பை குறைக்க இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதனிடையே, வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிரான விளம்பரம் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசால் வெளியிடப்பட்டது. அதில் மறைந்த அமெரிக்க மேனாள் அதிபர் ெரானல்டு ரிகன், வரி விதிப்பால் அமெரிக்கா பாதிக்கப்படும்’என கூறும் காட்சிப்பதிவு இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பர காணொலியில் அமெரிக்கா – கனடா உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
