ஜாதிகள் இருக்கேடி பாப்பா (தோழர் உடுமலை கவுசல்யா)

ஜாதிகள் இருக்கேடி பாப்பா (தோழர் உடுமலை கவுசல்யா) – ஆவணப்படம்  கீதா இளங்கோவன் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. உடுமலை சங்கர் பட்டப்பகலில் போக்குவரத்து பரபரப்புகளுக்கு இடையே ஆணவக் கொலை செய்யப்பட்டது பெரிய அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. ஜாதிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் இளம் மனைவி கவுசல்யா வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் சிலருக்கு அளித்த உருக்கமான கேள்வி பதிலாக இது அமைந்துள்ளது. காதல் இல்லா இலக்கியமும் திரைப்படங்களும் இல்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத ஜாதி அதற்கு பின்னர் ஆதிக்க சக்திகளால் திணிக்கப்பட்டு நாலு பேர் என்ன நினைப்பார்களோ, பேசுவார்களோ, சொல்வார்களோ என்று கவுரவம் பார்த்து கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டிருக்கிறது. ஜாதிக்கும் காதலுக்கும் நடக்கின்ற போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருந்து வருகிறது. இன்று வரை சில இடங்களில் மக்கள் வழிபடுகின்ற முத்தாலம்மன், பேச்சியம்மன், காத்தவராயன் என்ற பெயர் கொண்டவர்கள் ஜாதிய கொடுமைகளால் கொலை செய்யப்பட்டவர்களே இன்றைய தலைமுறையினர் அவர்கள் வழியில் சென்று விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதற்காகவே அவர்களை தெய்வங்களாக உருவாக்கி வழிபாடு நடத்தி வருகிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவனின் வாரிசு நம் குடும்பத்தில் எந்த வழியிலும் நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணமே இந்த மாதிரி கொலைகளுக்கு காரணம். பரபரப்பான இந்த கொலை விசயம் அதிகமாக பரவுவதற்கு எவிடன்ஸ் கதிர்  முன்வைத்த எட்டு கேள்விகள் முக்கியமானவை.  கவுசல்யாவுக்கு தமிழ்நாடு அரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திராவிடர் கழகம் AIDWA அமைப்புகள் நிதி உதவி செய்திருக்கின்றன. சங்கரின் தந்தைக்கு ஒன்றிய அரசு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. கவுசல்யாவும் இறந்து போன சங்கரும் ஒரே கல்லூரியில் பொறியியல் படித்த மாணவர்கள். கவுசல்யா வேலையும் பார்த்துக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி தன்னுடைய நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு ஜாதிய கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரங்களில் பங்கேற்று வருகிறார். ஜாதிய கொடுமைகளின் தாக்கம், அதன் விளைவுகள் குறித்து அவர் அளித்துள்ள உருக்கமான தகவல்கள் Periyar Vision OTT இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தோழர்கள் அவசியம் இதை காண வேண்டும்; பகிர வேண்டும்

 

வி. செல்வராஜ்,

அரவக்குறிச்சி

பெரியார் ஒடிடி செய்திகள்

 

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

இணைப்பு :  periyarvision.com

பெரியார் ஒடிடி செய்திகள்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *