பிஜேபியை வீழ்த்த திட்டம்: எதிர்க்கட்சிகள் விரைவில் ஆலோசனைக் கூட்டம் – சீதாராம் யெச்சூரி தகவல்

2 Min Read

அரசியல்

சென்னை, மே 17- பாஜகவை தோற் கடிக்க ஒன்றிணைந்து செயல்படு வோம் என்றும், விரைவில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோச னைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். சென்னையில் நேற்று (16.5.2023) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், அமைச்சர் துரை முருகன் உடன் இருந்தனர். 

பின்னர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் பேசும் போது, “கருநாடக தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து முத லமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விவாதித்தேன். இந்திய அரச மைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, பாஜகவை வீழ்த்த வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்திய அள வில் எதிர்க் கட்சி களை திரட்டி ஆலோசனைக் கூட்டம் விரை வில் நடத்தப்படும்” என்றார்.

இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு கல்விக் கொள்கை வகுக்கும் வல்லுநர் குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சீரமைக்க கோரி முதலமைச்சரிடம் கடிதம் வழங்கினார். 

அக்கடிதத்தில் கூறியிருப்ப தாவது: ஒன்றிய அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனா தன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்ததீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி, பாடப் புத்தகங்களை மாற்றிய மைப்பது, சுதந்திரப் போராட்ட வரலாறு உட்பட இந்திய வர லாற்றை மத அடிப்படையில் மாற்றிக் கற்பிப்பது போன்ற நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தமிழ் நாடு அரசு, மாநில கல்விக் கொள் கையை உருவாக்க நிபுணர்க ளைக் கொண்ட குழுவை அமைத் தது. ஆனால், இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில், மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மிகுந்த கவலையளிக்கிறது. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் உயர்ந்த நோக்கம் சிதைக்கப்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினையில் முத லமைச்சர் தலையிட்டு, கல்விக் கொள்கை குழுவில் ஏற்பட்டு உள்ள முரண்பாடுகளைச் சரி செய்து, விஞ்ஞான அடிப் படையிலான மாநில கல்விக் கொள் கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இப்பணியை செழுமைப்படுத் திட, ஏற்கெனவே அமைக்கப்பட் டுள்ள வல்லுநர் குழுவை மறு சீரமைப்பது குறித்தும் அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *