ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : ஜூனியர் ஆபிசர் டிரைய்னி (எச்.ஆர்.,) பிரிவில் 46 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.பி.ஏ., / பி.பி.எம்., / பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 30.5.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஸ்கில் தேர்வு.
தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள் : 30.5.2023
விவரங்களுக்கு : powergrid.in