“செய்யும் தொழில்களெல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகராகுமோ” என்பான். இது சும்மா வார்த்தை அலங்காரம்தான். இந்தத் தொழில் செய்கின்றவர்கள் குடும்பத்தோடு பிள்ளை குட்டிகள், மனைவி, கிழடு சிண்டுகள் அத்தனையும் சேர்ந்து காலம் நேரம் பார்க்காமல் வேலை செய்தாலும் கூட. அதன்மூலம் வருகின்ற கூலி வயிற்றுக்கே போதுமானதாக இருக்கின்றதா? அதனால் தான் இவர்கள் “இத் தொழிலுடன் மாரடித்தது போதும்; சந்ததிகளையாவது வேறு தொழிலுக்கு அனுப்புங்கள்” என்பதெல்லாம் இவர்கள் படும் கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்பதற்காகவே அன்றி வேறென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1794)
Leave a Comment
