தி இந்து:
*தேஜஸ்வி யாதவ்: வறுமை, வேலைவாய்ப்பு குறைபாடு இருந்தாலும் பீகாரை முன்னேற்ற மாநிலமாக மாற்றுவேன்; “பொய்யான வாக்குறுதிகள்” தரமாட்டேன் என உறுதி.
* பீகார் மகாகட்பந்தன் தேர்தல் அறிக்கை: சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, இடம்பெயர்வை குறைக்கும் நடவடிக்கைகள் முக்கியம்; காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமை மற்றும் வெளிப்படையான நியமன முறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உச்சநீதிமன்றம் தீர்ப்பு: மதச்சார்பு சுதந்திரமும், தனியுரிமையும் ஒன்றிணைந்த அடிப்படை உரிமைகள்; மதநம்பிக்கை, திருமணம் போன்ற விஷயங்களில் தனிநபரின் சுயாட்சி மிக முக்கியம்; ஒருவரின் துணைத் தேர்வையோ, நம்பிக்கையையோ அரசு அல்லது சட்டம் கட்டுப்படுத்த முடியாது.
* அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யா காந்த்: அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பெட்வார் கிராமத்தைச் சேர்ந்தவரும், அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்றவரும், பள்ளி நேரத்திற்குப் பிறகு வயல்களில் பணிபுரிந்தவருமான நீதிபதி சூர்யா காந்த் பெயரை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்க தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முடிவு.
– குடந்தை கருணா
