ஒன்றிய அரசில் 1600 காலியிடங்கள்

Viduthalai
1 Min Read

ஒன்றிய அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (டி.இ.ஓ.,), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (கிரேடு ஏ) பிரிவுகளில் 1600 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பிரிவுக்கு கணித பாடத்துடன் பிளஸ் 2, மற்ற பிரிவுகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.8.2023 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு,

தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் : 8.6.2023

விவரங்களுக்கு : ssc.nic.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *