தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, அக்.25 சென்னை மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளாட்சி அமைப் புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு திட் டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை யும் உணவு வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
திட்ட விவரங்கள்
பயனாளிகள்: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய, வடக்கு மற்றும் தெற்கு வட்டார பகுதிகளில் பணிபுரியும் மொத்தம் 29,455 பணியாளா்களுக்கு உணவு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டு களுக்கு வழங்கப்பட உள்ளது.
செலவு: இதற்காக ரூ.186 கோடியே 94 லட்சம் செலவிடப்பட உள்ளது.
திட்ட கண்காணிப்பு: திட்டத்தைக் கண்காணிக்க திட்ட மேலாண்மை ஆலோசகா் ஒருவா் சென்னை மாநக ராட்சியால் நியமனம் செய்யப்பட உள்ளார் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 5.30 மணி முதல் 6 மணி வரை மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை உணவு வழங்கப்படும்
தூய்மைப் பணியாளர்கள் பெரும் பாலும் அதிகாலையிலேயே தங்கள் பணியைத் தொடங்கிவிடுவதால், அவர்களால் சரியான நேரத்தில் உணவு சமைத்து உண்ண முடிவ தில்லை. இந்தத் திட்டத்தின் மூலம், அவர்களுக்குக் ‘காலை, மதியம், இரவு’என மூன்று வேளைகளும் இலவச உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
சரியான நேரத்தில் சத்தான உணவு கிடைப்பதால், அவர்களின் ‘உடல்நலன் மேம்படும்’ மற்றும் நோய்வாய்ப்படுவது குறையும்.
உணவுப் பிரச்சினை தீர்க்கப்படு வதால், பணியாளர்கள் முழு கவனத் துடன், மிகுந்த ‘ஆற்றலுடன்’ தங்கள் பணியைச் செய்ய முடியும், இதனால் ஒட்டுமொத்தப் பணித்திறனும் உயரும்.
மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுவதால், அவர்களின் ‘குடும்பப் பொருளாதாரச் சுமை’ கணிசமாகக் குறையும்.
உழைப்பிற்கு திராவிடமாடல் அரசு கொடுக்கும் மரியாதை
இந்தத் திட்டம் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் ‘பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும்’ ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் கடின உழைப்புக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமாகவும், மரியாதையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தொடங் கப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
