சென்னை, அக்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர் மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், ஒன்றிய அரசு இதற்கு அனுமதி தராமல் காலம் கடத்துவது கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவு வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
