தஞ்சை, அக்.25 அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகிதத்திற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாகரிகமில்லாமல் பேசி வருகிறார், அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக ஏதேதோ பொய் சொல்லி வருகிறார் எனவும் கூறியுள்ளார்.
நெல் ஈரப்பதம்: ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை, அக்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர் மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், ஒன்றிய அரசு இதற்கு அனுமதி தராமல் காலம் கடத்துவது கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவு வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
திருமணமான பெண்கள் நகைகள் அணிய கட்டுப்பாடு விதித்த கிராமம்
டேராடூன், அக். 25 தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது பெண்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர்- பவார் பழங்குடி பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிப்ப வர்கள் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களின் போது அணியும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனை இந்த கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒருமனதாக ஒரு முடிவு செய்துள்ளனர். அதில் குடும்ப விழாக்களில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருமணமான பெண்கள் 3 குறிப்பிட்ட தங்க நகைகளை மட்டுமே அணிய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.
இனிமேல் திருமணம் மற்றும் குடும்ப விழாக்களில் பங்கேற்கும் பெண்கள் மூக்குத்தி, காதணி மற்றும் நெக்லஸ் ஆகிய 3 நகைகளை மட்டுமே அணிய வேண்டும். இந்த கட்டுப்பாட்டை மீறும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,
தங்கத்தின் விலை உயர்வால் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்கித் தவிக்கின்றனர். மேலும் சேமிப்பும் குறைகிறது. திருமணம் என்பது மேன்மையானது. அது பகட்டான காட்சி மேடை அல்ல. எனவே தான் பணக்காரர் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இடையேயான வெளிப்படையான நுகர்வை குறைப்பது, தேவையற்ற செலவுகளை கட்டுப் படுத்துவது, சமூக ஒற்றுமையை வளர்ப்பது போன்ற நோக் கங்களுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலை மீறும் எந்த பெண்ணுக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு கந்தர்கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் கட்டாயமாகும் என்றனர்.
