டில்லி நொய்டா பகுதியின் முக்கிய சாலையில் வைத்திருக்கும் குப்பைத்தொட்டிகளில் பட்டாசைப் போட்டுக் கொளுத்தி அதனை நாசம் செய்வதை வெளிநாட்டு மென்பொறியாளர் ஒருவர் படமாக எடுத்து ‘‘பொது சொத்திற்கு சேதம் விளைவித்துதான் உங்கள் தீபாவளி கொண்டாடவேண்டுமா”? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதே போல், கனடாவின் எட்மவுட் டவுன் என்ற பகுதியில் தீபாவளி கொண்டாடி உள்ளனர். வீட்டில் ராக்கெட் விடும் போது வீட்டில் வைத்திருந்த பட்டாசுகளின் மீதே அந்த ராக்கெட் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. முதலில் மண்ணைப் போட்டு அணைக்கப் பார்த்தார்கள். ஆனால் தீ கார் பார்க்கிங் மற்றும் சமையல் எரிவாயு குழாய் உள்ள பகுதிக்குப் பரவி பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவே வேறு வழியின்றி தீயணைப்பு துறையினரை தொடர்புகொண்டனர். அவர்கள் வந்து தீயை அணைத்து தீபாவளி கொண்டாடிய இந்தியர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களுக்கான எரிவாயு சலுகையை ரத்தும் செய்துள்ளது.
