இந்நாள் – அந்நாள்

2 Min Read

‘ரைட் சகோதரர்கள்’ முதன் முதலில் விமானத்தை மேலெழுப்பி பறந்த நாள் (24.10.1903)

1903 ஆண்டு அக்டோபர் 24 விண்ணைத்தொட ரைட் சகோதரர்கள் எடுத்துவைத்த முதல் அடி வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஆகும்.

ரைட் சகோதரர்கள் (வில்பர் மற்றும் ஓர்வில் ரைட்) விமானப் போக்குவரத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்கள்.

அவர்களில் முதல் விமான மாதிரி ஆட்கள் இல்லாமல் 1894 ஆம் ஆண்டு பறக்கவிட்டனர். அது வெறும் 12 வினாடிகள் மட்டுமே பறந்தது. இதுவே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது

இதனை அடுத்து மனிதர்கள் அதில் பயணம் செய்யும் வகையில் பெரிய மாதிரியை உருவாக்கினர். இதற்காக 8 ஆண்டுகள் இரவு, பகலாக உழைத்தனர்.

இறுதியாக 24.10.1903 ஆம் ஆண்டு வில்பர்ட் ரைட் பைன் மரக்கட்டையால் செய்யப்பட்ட சிறகுகளும் சைக்கிள் டயர் மற்றும் கம்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட விமானம் போன்ற ஒன்றை அமர்ந்து பறந்தார்.

‘கிட்டி ஹவுக்’

அமெரிக்க அய்க்கிய நாட்டின் வடக்கு கரோலினாவில் உள்ள பகுதியில் இது நடந்தது. இவர்களின் முதல் விமானப் பயணம் இங்கு நடந்ததால் இந்த இடத்தின் பெயர் ‘கழுகுகுஞ்சு’ (கிட்டி ஹவுக்) என்று பெயர் பெற்றது

இந்தச் சிறிய காற்றில் மிதந்த ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமே மனிதன் விண்வெளியைத் தொடுவதற்கான மிகப்பெரிய அறிவியல் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.

ரைட் சகோதரர்கள் ஒரு சைக்கிள் கடையை நடத்தி வந்தனர். அங்கு கிடைத்த அனுபவத்தையும், முந்தைய விமானிகள் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து பெற்ற அறிவையும் பயன்படுத்தி, வளிமண்டலம் குறித்து புதிய கோணங்களில் சிந்தித்தனர்.

பறக்கும்போது விமானி விமானத்தை நிர்வகிக்க உதவும் ஓர் கட்டுப்பாடு அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் வெற்றி கண்டனர். இதுவே இன்றைய விமானங்களின் அடிப்படை வடிவமைப்பிற்கு முக்கியமானது.

அதன் பிறகு விமானத்தைப் பறக்க வைக்கத் தேவையான இலகுவான, சக்திவாய்ந்த ஒரு பெட்ரோல் எஞ்சினை அவர்களே வடிவமைத்து உருவாக்கினர்.

இந்தக் கண்டுபிடிப்பு, கனமான உலோகத்தால் ஆன ஓர் இயந்திரத்தை, புவியீர்ப்பு விசையை மீறி, மனிதக் கட்டுப்பாட்டின்கீழ் காற்றில் மிதக்கச் செய்யும் சாத்தியத்தை உலகிற்கு உணர்த்தியது.

வளிமண்டலத்திற்கு அப்பால்…

ரைட் சகோதரர்களின் 1903 ஆம் ஆண்டுப் பயணத்திற்குப் பிறகு, விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, மனிதர்களை பூமியின் வளிமண்டலத் திற்கு அப்பால் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உதவியது.

ஆனால் இவர்கள் கண்டுபிடித்த விமான மாடல் அதிகமாக உலகப்போரின் போதுதான் பயன்படுத்தப் பட்டது என்பதும் ஒரு சோகமான செய்தியாகும்

இருப்பினும்  முதல் உலகப் போர் விமான தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. விமானங்களின் வடிவமைப்பு, வேகம் மற்றும் ஆயுள் ஆகியவை பல மடங்கு மேம்படுத்தப்பட்டன.

போருக்குப் பிறகு, வணிக ரீதியான விமானப் போக்குவரத்து பிரபலமடைந்தது. இது உலகெங்கி லும் உள்ள மக்கள், கலாச்சாரங்கள் மற்றும் பொருளா தாரங்களை இணைத்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *