சென்னை, அக்.24 வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழ்நாட்டில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. எனினும் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங் களில் கனமழை தொடரும் வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பல மாவட் டங்களில் நேற்று (24.10.2025) கனமழை கொட்டி தீர்த்தது. பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் முழுவதும் பரவலாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. வேகமாக அணைகள் நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி பல்வேறு அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. . இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
அதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது, இன்று வட தமிழகம், புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடக்கு – வட மேற்கு திசையில் இன்று நகர்ந்து செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் புயல் அபாயம் நீங்கியது.
