தென்காசி, அக்.24- தீபா வளியன்று குண்டு வெடித்து வாலிபர்கள் கொண்டாடி னார்கள்.
சிலர் தாங்கள் பட்டாசு வெடித்ததை கைப்பேசியில் காட்சிப் பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த வகையில் வாலிபர்கள் சிலர் பட்டாசுக்கு பதிலாக டீசல் குண்டை வெடிக்க வைத்த சம்பவம் பாவூர் சத்திரம் அருகே அரங்கேறி உள்ளது. அதாவது, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தீபாவளி பண்டிகை அன்று இரவில் பட்டாசுகளை வெடித்தனர்.
அதை கைப்பேசி யில் காட்சிப் பதிவு எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி உள்ளனர். ஆனால், அந்த காட் சிப் பதிவு பட்டாசு வெடித்தால் வரும் புகைக்கு மாறாக வெடிகுண்டு வெடித்தால் எப்படி தீப்பற்றி எரியுமோ அதே போன்று எரிந்தது. அதாவது பட்டாசுகளுக்கு பதிலாக டீசலை பிளாஸ்டிக் கவரில் ஊற்றி குண்டுகளை தயார் செய்து வெடிக்க செய்து பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.
இந்த காட்சிப் பதிவு வைரலா னதை தொடர்ந்து பாவூர் சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு வாலிபர்கள் யார்?, டீசல் குண்டுகளை எப்படி தயார் செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
