
ஜெயங்கொண்டம், அக். 24- பெரியார் மேல்நிலைப் பள்ளியில் (ஜெயங்கொண்டம்)- பன்னிரெண்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி விசுவதர்சினி மற்றும் மணிஷ்யா ஆகியோர் கல்வியில் சிறந்து விளங்கியதோடு, வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளாக இருப்பதனால், பெண் கல்வியை ஊக்குவிக்க வறியோருக்கு உதவும் வகையில் செயல்படும் “சபாபதி கல்வி அறக் கட்டளை” சார்பில் தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
பள்ளி முதல்வர் இரா.கீதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவித் தொகைப் பெற்ற மாணவிகளை வாழ்த்தினர். முதல்வர் இரா.கீதா தெரிவித்ததாவது: “இத்தகைய உதவித் தொகைகள் வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் துணையாகின்றன. சமூக நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் மாணவர்களுக்கு வழங்கும் உதவிகள், அவர்களின் எதிர்காலத்தை உருவாக் கும் ஒரு சிறந்த படிக் கல் ஆகும்” என்று பெற் றோரிடம் கூறினார்.
இந்த நிகழ்வு மற்ற மாணவர்களுக்கும் கல்வியில் முன்னேற ஊக்கமளிக்கக்கூடிய ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. எனவே சபாபதி கல்வி அறக்கட்டளைக்கு கல்வி நிறுவனத்தின் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
