மாவட்ட கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிப்பு
கிருஷ்ணகிரி, மே 18 கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் நகராட்சி அலு வலர்கள் இணைந்து 15.05.2023 அன்று வலம்புரி விநாயகர் சிலையை பார்ப்பனரை வைத்து பூஜை செய்தனர்.
அதைக் கண்டித்து (17.05.2023) புதன்கிழமை காலை 11 மணி யளவில் கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகத்தில் கடவுள் , மத வழிபாட்டு தலங்களை அமைப்பது சட்டவிரோதம், அமைக்கக் கூடாது என்ற அரசாணைக்கு எதிராக சிலை வைத்ததைக் கண் டித்து தலைமைக் கழக அமைப் பாளர் ஊமை.ஜெயராமன் நக ராட்சி அலுவலக வாயிலில், நக ராட்சி அலுவலர்களைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்.
அதில் இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்த விநாயகர் சிலையை ‘விடுதலை’ செய்தியின் எதிரொலி காரணமாக விநாயகர் சிலையை மட்டும் இரவோடு இரவாக அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் வைத்த லட்சுமி சிலையை அப் படியே விட்டு வைத்திருக்கிறார்கள். அந்த சிலையையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும்; லட்சுமி சிலை இருக்கும் இடத்தில் ஏற்கெனவே காந்தி சிலை இருந் தது . காந்தி சிலையை எடுத்து விட்டுதான் இலட்சுமி சிலை வைத்துவிட்டு, காந்தி சிலையை ஒரு ஓரமாக வைத்துவிட்டனர்.
எனவே, இலட்சுமி சிலையை உடனே எடுத்துவிட்டு அதே இடத்தில் உடனடியாக காந்தி சிலையை வைக்க வேண்டும் , காந்தி சிலையை வைக்கும் வரை திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்து உள்ள அனைத்து கட்சியி னரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தும் என்று கண் டன உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமை யில் நகராட்சி அலுவலர் பொறி யாளர் சரவணனை சந்தித்து, திராவிடர் கழகத்தில் சார்பில் சிலையை அகற்ற வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கா. மாணிக் கம், துணைத் தலைவர் வ.ஆறு முகம், பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிட மணி ,கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ. தங்கராசன் ,ஒன்றிய தலைவர் த.மாது, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், அமைப்பாளர் சி .இராஜா, மத்தூர் ஒன்றிய தலைவர் கி. முருகேசன், ஒன்றிய துணைத் தலைவர்
ச. தனஞ்ஜெயன், விடுதலை சிறுத் தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மு. அருண், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்டத் துணை அமைப்பாளர் முரளி, கழக மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் சீனிமுத்து ராஜேசன், ஊற்றங்கரை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், பகுத்தறிவாளர் கழக கிருஷ்ணகிரி நகர செயலாளர் ச. நாகராஜ் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.கோ.இராஜா ஆகி யோர் கலந்து கொண்டனர்.