ஜூன் 15இல் திருவாரூர் காட்டூரில் “கலைஞர் கோட்டம்”

2 Min Read

பீகார் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

திருவாரூர், மே 18 – திருவாரூர் அருகே காட் டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, இ.பெரியசாமி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண் டில் 123 கிலோ மீட்டர் தூர சாலைகள் ரூ.128 கோடி மதிப்பீட்டிலும், இந்த ஆண்டில் 71 கிலோ மீட்டர் தூர சாலைகள் ரூ.90 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன. நபார்டு உதவியுடன் ரூ.24.50 கோடியில் 11 பாலப் பணிகள் தொடங்கப்பட்டு 7 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் 

நாகை – மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள நீடாமங்கலத்தில் ரயில்வே மேம் பாலம் கட்ட நில எடுப்புப் பணிகள் நடத்தப் பட்டு ரூ.170 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டிலேயே ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளன. மயிலாடு துறை திருவாரூர் சாலை பேரளம் பகுதியில் ரூ.44 கோடியில் ரயில்வே மேம்பாலம் ரூ.39 கோடியில் கட்டப்பட உள்ளது. சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட் டத்தின்கீழ் தஞ்சை, மன்னார்குடி, கும்ப கோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, திரு வாரூர் ஆகிய 3 சாலைப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடந்து வருகின்றன. நாகை -தஞ்சை இடையே 65 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் ரூ.283 கோடி திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகிறது.  

அடுத்த மாதம்(ஜூன்) 3 ஆம் தேதி சென் னையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து 5 ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,000 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவ மனையை திறந்து வைக்கிறார். 

திருவாரூர் காட்டூர் பகுதியில் கட்டப் பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அடுத்த மாதம் (ஜூன்) 15 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

-இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *