நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை, அக்.23-  சென்னை: நெல்​மூட்​டைகள் மழை​யில் நனை​யாமல் தடுக்க போர்க்​கால அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக வேளாண்மைத் துறை அமைச்​சர் எம்​ஆர்​கே. பன்​னீர்​செல்​வம் தெரி​வி்த்​துள்​ளார்.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி, அரசு மீது குற்​றம்​சாட்டியிருந்​தார். இதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் கூறிய​தாவது: பொய்யை உண்மை போலவே எதிர்க்​கட்​சித் தலை​வர் கூறுகிறார். அதிமுக ஆட்​சி​யில் 700 மூட்​டைகள்​தான் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. தற்​போது ஆயிரம் மூட்​டைகள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்றன.

இதற்கு தேவையான இடவச​தி, பணி​யாளர்​கள் வேண்​டும். கூடு​தல் நெல் பாது​காப்பு கிடங்​கு​கள் கட்ட டெண்​டர் விடப்​பட்​டுள்​ளது. கடந்த ஆட்​சி​யில் போதிய கிடங்​கு​கள் கட்டாததும் பிரச்​சினைக்குக் காரணம். தற்​போது மேற்​கூரை​யால் நெல் மூட்டைகள் பாது​காக்​கப்படுகின்றன. கடந்த காலங்​களை​விட 5 மடங்கு கூடு​தல் நெல் விளைந்​துள்​ளது. தற்​போது 1,500 நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. நெல் மூட்​டைகள் நனை​யாமல் பாது​காக்க சர்க்​கரை ஆலை கிடங்​கு​கள், சிவில் சப்​ளைஸ் கிடங்​கு​களை பயன்​படுத்​தி​யுள்​ளோம். கடலூர், மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் முழு​மை​யாக நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. திரு​வாரூரில் மட்​டும் கொஞ்​சம் இருப்பு உள்​ளது. அதை பாது​காப்​பான இடத்​தில் வைக்க ஏற்​பாடு செய்​துள்​ளோம். வடகிழக்கு பரு​வ​மழை தற்​போது முதல் நாளி​லிருந்தே பெய்​வ​தால், சில இடங்​களில் கொள்​முதல் செய்​யப்​ப​டாத நெல் மூட்​டைகள் நனைந்​துள்​ளன. ஒரு சில இடங்​களில் ஏற்​பட்ட பிரச்​சினை​யும் தற்​போது சரி செய்​யப்​பட்​டுள்​ளது. சம்பா சாகுபடி​யில் 16 ஆயிரம் எக்​டேர் பரப்பு பயிர்கள் நீரில் மூழ்​கி​யுள்​ளன. இதில் 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்​தால் இழப்​பீடு வழங்​கப்​படும். நெல் மூட்​டைகள் நனை​யாமல் தடுக்க போர்க்​கால நடவடிக்​கைகள் எடுக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதற்​கிடையே பரு​வ​மழை முன்​னேற்​பாடுகள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம் அமைச்சர் தலை​மை​யில் சென்னை தலைமைச் செயல​கத்​தில் நேற்று (22.10.2025) நடை​பெற்​றது. வேளாண் துறை செய​லர் வ.தட்​சிணா​மூர்த்​தி, இயக்​குநர் பி.​முரு​கேஷ், தோட்​டக்​கலைத் துறை இயக்​குநர் பி.குமர​வேல்​பாண்​டியன் உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *