மழை பாதிப்பு நிவாரணப் பணிகள் தீவிரம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 நிவாரண முகாம்கள்: தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை, அக்.23- வடகிழக்குப் பருவமழை காரணமாக , தமிழ்நாடு அரசு சென்னை மாநகரில் 215 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

மழை பாதிப்புகளை சமாளிக்க 24,149 பணியாளர்கள் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார் . அக்டோபர் 19 அன்று மாநில அவசர செயல்பாட்டு மய்யத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், கடலோர மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

நிவாரண முகாம்கள்

சென்னையில் மொத்தம் 215 நிவாரண முகாம்கள் மற்றும் 106 சமுதாய சமையலறைகள் அமைக்கப் பட்டுள்ளன. தற்போது 68 சமுதாய சமையலறைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 22.10.2025 அன்று மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

22,000 பணியாளர்கள்

நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்காக , பெருநகர சென்னை மாநகராட்சியின் (Greater Chennai Corporation) 22,000 பணியாளர்கள், இதில் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் அடங்குவர். மேலும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் (Chennai Metropolitan Water Supply and Sewerage Board) 2,149 களப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 அன்று தொடங்கியது. இதன் காரணமாக சென்னை மாநகரம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *