தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் மாநில தலைவரும், மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் – என்றும் நம் திராவிடர் கழகத் தலைவர் மீதும், அதன் தொண்டர்கள் மீதும் வற்றாத பாசம் கொண்ட சொல்லின் செல்வர் கே.எஸ்.அழகிரி அவர்களின் பிறந்தநாளில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாவட்ட துணைத் தலைவர் அன்பு சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நெடுமாறன், சிதம்பரம் அமைப்பாளர் செல்வரத்தினம், மாணவர் கழக அமைப்பாளர் அபிஷேக் ஆகியோர் நேரில் சென்று பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர்.
