மக்களுக்கு பணியாற்றுவதில் தி.மு.க.வினர் போட்டிப் போட்டுக் கொண்டு உதவி செய்ய வேண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை, அக். 23- திமுக நெட்வொர்க் தான் உலகத்திலேயே மிகப் பெரிய நெட்வொர்க் என்றும், எனவே திமுகவினர் இந்த நெட்வொர்க்கை போட்டி போட்டு மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை வேகமெடுக்க ஆரம்பித்து ள்ளது. இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (22.10.2025) காலை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, தாம்பரம், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநகர, நகர, பேரூராட்சி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

முதலமைச்சர் அறிவுரைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வரக்கூடிய நிலையில் அதற்காக நடைபெறுகின்ற ஒரு ஆலோசனை கூட்டம் என நினைக்க வேண்டாம், அது நிச்சயமாக இல்லை. ஒரு வெள்ளத்திற்கு முன்பும் ஒவ்வொரு பேரிடருக்கு முன்பும் இது போன்ற பல்வேறுக் கூட்டங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளோம். குறிப்பாக கரோனா காலத்தில் மக்கள் உடன் நின்று இருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் நம் மக்கள் வாக்களித்து நம்மை ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள்.  கரோனா காலத்தில் நமது தலைவர் தான் முன் களப்பணியாளராக முன் நின்று இருக்கிறார். இன்று தைரியமாக பொது மக்களை சந்திக்க போகிறோம் என அனைத்து மக்கள் பிரதிநிதிகள் சொல்லி வருகிறார்கள். அத்தனை பணிகள் இந்த அரசு மேற்கொண்டு உள்ளது. தொடர் மழையால் சில பகுதியில் மழை தேங்கி இருந்தாலும் உடனடியாக பாருங்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஏனென்றால் முதலமைச்சரிடம் இதை சொன்னால் உடனடியாக இந்தப் பணிகள் முடிவடை யும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் சொல்கிறார்கள். மக்கள் பிரச்சினை எப்போது எங்கு இருந்தா லும் திமுக உடன் இருக்கும். இயற்கை பேரிடர்கள் எதுவாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி களாக இருந்தாலும் சரி மக்களுடன் முதலமைச்சர் நிற்கிறார். நமக்கு கூடுதல் பொறுப்பு தற்போது இருக்கிறது. 2015ஆம் ஆண்டு பெரிய மழையாக இருந்தாலும், புயலாக இருந் தாலும் சரி, வர்தா புயலாக இருந்தாலும் சரி பேரிடர் காலத்தில் திமுக முன் களப்ப ணியாளராக நின்று மக்களை காப்பாற்றியு ள்ளோம்.

நிவாரணப் பணிகள்

நிவாரண பணிகள் வழங்கப்பட்டு மக்களுடன் ஒன்று இருந்தோம் சுழன்று நம் பணி மேற்கொண்டு இருக்கிறோம். தற்போது சமூக வலைதளம் தொலைக் காட்சிகள் அதிகமாக உள்ளது. மக்களுக்கு பிரச்சினை இருந்தால் களத்திற்கு சென்று உண்மை நிலவரத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். மழைக் காலத்தில் முதியோர்கள் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. உணவுகள் கூடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தாழ்வானப் பகுதிகளில் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  முகாம்களுக்கு வரத் தயங்கும் மக்களை அவர்களை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கும் பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளன.மக்களிடம் பேசும் போது கண்ணியத்துடன், கவனத்துடனும் பேச வேண்டும். கவனத்துடன் மக்களை அணுக வேண்டும். திமுக நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை மக்கள் சேவைக்கு பயன் படுத்த வேண்டும்.ஒரே நேர் கோட்டில் நாம் செயல்பட்டால் தான் அரசுக்கும், திமுகவுக்கும், முதலமைச்சருக்கும் பெருமை சேர்க்க முடியும். மேயர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் போன்றவர்கள் மீட்பு மற்றும் முகாமில் முறையாக கண்காணிக்க வேண்டும்.

போட்டிப் போட்டுக்கொண்டு உதவி செய்ய வேண்டும்

நாம் அனைவரும் களத்தில் நிற்க வேண்டும். அதை முதலமைச்சர் கண்காணிப்பார். இந்த மழைக்காலத்தில் மட்டுமல்ல இனி வரும் ஒவ்வொரு நாளும் உங்களுடைய செயல்பாடுகள் மிக மிக முக்கியமாக இருக்க வேண்டும். போட்டி போட் டுக் கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். இதுதான் திமுகவிற்கும், கருப்பு சிவப்பு கொடிக்கு, நமது தலைவருக்கு நாம் சேர்க்கும் பெருமை. எத்தனையோ பேரிடர், பெருமழையிலா நம்முடைய மக்களை காப்பாற்றியுள்ளோம். இந்த மழை காலத்தில் மக்களுடன் நின்று அவர்களை காப்பாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *