சென்னை சோழிங்கநல்லூர் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 44.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கண் நீர் ஒழுங்கியுடன் 850 மீ. நீளத்தில் 1,100 கன அடி வெள்ள நீர் கடத்தும் திறனுடைய இரண்டு கண் கொண்ட கூடுதல் பெரு மூடு வடிகால்வாய் அமைக்கப்பட்டதால் நீர் தடையின்றி செல்வதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்எஸ்.அரவிந்த் ரமேஷ், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
