உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது
செருப்பை வீசிய ஸநாதனவாதியைக் கண்டித்து
நாகர்கோவில்
குமரி மாவட்டக் கழகச் சார்பாக நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பாக குமரிமாவட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம் தலைமை தாங்க கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.குணசேகரன், கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
மாவட்டக் கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்க வுரையாற்றினர். ம.திமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் சார்பாக வழக்குரைஞர் இரா.இராதாகிருஷ்னன், வி.சிக சார்பாக பா.பகலவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மேனாள் செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக அகமது உசேன், கோட்டாறு பகுதி கழக தலைவர் ச.ச மணிமேகலை ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவு ரையாற்றினர். மாவட்டக் கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட மகளிரணி தலைவர் இந்திராமணி, மாவட்டக் கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடசேரி பகுதிக் கழகத் தலைவர் பா.சு.முத்துவைரவன் கழகத் தோழர்கள் பி.கென்னடி குமரிச்செல்வன், பால்மணி மற்றும் தோழர்கள், தோழமை இயக்கத்தினர். பெருந்திரளாகப் பங்கேற்றனர். போராட்டம் குறித்த நூல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. கழகப் பொதுக் குழு உறுப்பினர் மு.இராஜசேகர் நன்றி கூறினார்.
திண்டுக்கல்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு, நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளைக் கண்டித்து, திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம் மாவட்ட கழகச் சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு 16.10.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமை வகித்தார். தேனி மாவட்டத் தலைவர் மா. சுருளி ராஜ், தேனி மாவட்டக் காப்பாளர் கருப்புச் சட்டை நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்டத் துணைச் செயலாளர் இரா.ஜெயபிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார்.
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் தொடக்க உரையற்றினார். அதனைத் தொடர்ந்து திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை செயலாளர் மு நாகராசன், பழனி பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.திராவிடச்செல்வன், திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் த.கருணாநிதி ஆகியோ ரின் உரையினைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தினை விளக்கி கழகச் சொற்பொழிவாளர் தி. என்னெரசு பிராட்லா கண்டன உரையாற்றினார்.
அவரது உரையில், தாழ்த்தப் பட்ட சமூகத்தில் இருந்து இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி பயின்று இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகியுள்ளார். உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பார்ப்பன ஆதிக்கம் அதிகம் உள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் நீதிபதியாக இருப்பதால் பார்ப்பனர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுராஹோ கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலையை மீட்டெடுக்க கோரி ஒருவர் வழக்கு தொடுக்க, அதற்காக அந்த நீதிபதி நீங்கள் விஷ்ணு தீவிர பக்தர்கள் என்று கூறுகிறீர்கள், நேரடியாக “நீங்கள் சென்று அந்த விஷ்ணுவிடமே பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி, சுய விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு நீதிபதி இவ்வளவு சுதந்திரமாக, யாருக்கும் கட்டுப் படாமல் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிராக பல நாள்கள் கழிதது வழக்குரைஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசி உள்ளார். கடவுள் சொல்லித்தான் தாக்குதல் நடத்தினேன் என்று கூறியுள்ளார். ஸநாதன தர்மப்படி சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்க கூடாது என்று கூறுகிறது. அப்படிப்பட்ட நிலையை மாற்றி தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர் இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற நிலைக்கு உயர்ந்து உள்ளதால் பார்ப்பனர்களுக்கு தாங்க இயலவில்லை, என பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் பெ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.சக்தி சரவணன், திண்டுக்கல் மாநகரத் தலைவர் அ.மாணிக்கம், மாநகரச் செயலாளர் தி.க.செல்வம், நத்தம் எம்.ஆர்.பி.செல்லம், ஒன்றிய செயலாளர் ச.பொன்ராஜ், மாநகர இளைஞரணிச் செயலாளர் கோ.சரவணன், நரசிங்கன், நடராஜன், கே.கருணாநிதி, கோபி, சித்ரா கோபி, காளியம்மாள், பழனி சி.இராதாகிருஷ்ணன், செந்தில், கழக ஓவியர் சேக் முகமது, வீரக்குமார், தேனி வளையாபதி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். இறுதியில் பழனி மாவட்ட துணைத் தலைவர் ஆ.இராமகிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.
