சென்னை, அக். 22- தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பருவ மழைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காத வகையில் கட்டமைப்பை உறுதிசெய்ய வேண்டும். தடையற்ற மின்சாரத்தை வழங்கவும். மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர்களை பழுதின்றி பராமரிக்கவும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.தீவிரபாதிப்பு உள்ளநோயாளிகள், பிரசவத் தேதி நெருங்கிய கர்ப்பிணிகளை கண்டறிந்து, முன்கூட்டியே மருத்துவமனை களில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அவர்களை அனு மதிக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
