கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் தி.மு.க., தீபாவளிக்கு ஏன் கூற மறுக்கிறது என்று அக்கட்சி தொண்டர் ஒருவர் ஆ.ராசாவிடம் கேள்வி எழுப்பினார். பதிலளித்த அவர், இயேசு, முகமது நபி ஆகியோர் பிறந்ததற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன. நரகாசுரன் பிறந்தார், பூமியை பாயாக சுருட்டினார் என்ற கதையை நம்ப முடிகிறதா? என்ற அவர், பகுத்தறிவுக்கு ஒவ்வாததால் தீபாவளிக்கு வாழ்த்து கூறுவதில்லை என்று விளக்கமளித்தார்.
கூட்டணியில் மீண்டும் இணைந்தார்.. அரசியல் மாற்றம்
அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீகார் அரசியல் களம் பல மாற்றங்களை கண்டு வருகிறது. காங்., கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு முடியாதது, பி.ஜே.பி., ஆர்.ஜே.பி., ஜே.டி.யூ., காங்., தலைவர்கள் கட்சி தாவல்கள் என பல திருப்பங்கள் நடக்கின்றன. இந்நிலையில், ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து விலகிய ஜே.எம்.எம். 6 தொகுதிகளில் களமிறங்குவதாக அறிவித்திருந்த நிலையில், அதிலிருந்து பின்வாங்கி மீண்டும் இண்டியர் கூட்டணியில் இணைந்துள்ளது.
20 சிகரெட் அளவுக்கு ஆபத்து!
சென்னையில் காற்று மாசு!
சென்னையில் காற்று மாசு!
தீபாவளி முடிந்ததும் டில்லி, சென்னை போன்ற பெருநகரங்கள் மூச்சுவிட முடியாமல் தவித்து வருகின்றன. சென்னையில் காற்று மாசின் அளவு 400-அய் கடந்துவிட்டதாம். இதில், டில்லியின் சராசரியே 500-அய் கடந்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 400-500 வரை இருந்தால் அது மிக கடுமையான காற்று மாசு. சென்னையில் மக்கள் ஒவ்வொருவரும் 20 சிகரெட் பிடிக்கும் அளவுக்கு மாசு காற்றை சுவாசிப்பதாக எச்சரிக்கப்படுகிறது.
