பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 495ஆவது வார நிகழ்வாக இந்திக்கு இங்கே இடமில்லை என்று முழங்கும் திராவிட மாடல் ஆட்சி கருத்தரங்கம்
18-10-2025  சனிக்கிழமை மாலை 7 மணிக்கு கொரட்டூர் பாசறை அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக  செய லாளர் க.இளவரசன் முன்னிலையில் தி.மு.க.தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் மா.வள்ளிமைந்தன்  தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவர் பூ.இராமலிங்கம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தே.குணாபாரதி ஆகியோர் உரையாற்றினர்.அரவிந்தன், கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, பா.மணி,சசிகுமார்,ஹரிதாஸ்,பிச்சைமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக  வழக்குரைஞர் துரைவர்மன் நன்றி கூறினார்.

 
		 
		 
		 
		 
		 
		