
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய கழக செயலாளர் பள்ளத்தூர் ஆ.சண்முகவேல் – கலைச்செல்வி (சுயமரியாதைக்காரன் இல்லம்) மன்னார்குடி – புள்ளமங்கலம் சம்பந்தம் – மல்லீஸ்வரி இவர்களின் பேரன் பள்ளத்தூர் சதீஷ்குமார் – பேபி கலா இவர்களின் மகன் இனியன் 22 .10.2025 அன்று ஆறாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 வழங்கியுள்ளனர். வாழ்த்துக்கள்.நன்றி!!.
தேனி மாவட்ட கழக காப்பாளர் போடிநாயக்கனூர் ரகுநாகநாதன் வாழ்விணையரும் பொதுக்குழு உறுப்பி னருமான நல்லாசிரியர் கவிஞர் பேபி சாந்தாதேவி 76 ஆம் ஆண்டு(23.10.2025) பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார். குழந்தைகள்காப்பகத்திற்கு ரூபாய் 1000/நன்கொடை வழங்கினார்.
