தமிழ்நாட்டின் நகரங்களுக்கிடையே ‘வளர்ச்சி உரிமை மாற்றுச் சான்றிதழ்’: விதிகளை தளர்த்த திட்டம்

சென்னை அக்.21-  தமிழ்நாட்டில் ‘டி.டி.ஆர் எனப்படும் வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை, நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் விதிகளை தளர்த்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது, அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மேலும் ஊக்கமளிக்கும் எனக் கூறப்படுகிறது.

வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழ் என்றால் என்ன? நகர்ப்புறங்களில் சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல் போன்ற அரசு திட்டங்களுக்காக தனியாருக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது, இழப்பீடை ரொக்கமாக வழங்குவதால் திட்டச் செலவு அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக, நிலத்தின் உரிமையாளருக்கு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வளவு பரப்பளவுக்கு கட்டடம் கட்ட முடியுமோ, அந்த உரிமையை (வளர்ச்சி உரிமை) தனக்கு சொந்தமான வேறு நிலத்தில் பயன்படுத்திக் கொள்ள ‘வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழ்’ வழங்கப்படுகிறது. இதன் மூலம் உரிமையாளர் வேறு இடத்தில் கூடுதல் பரப்பளவுக்கு கட்டடம் கட்டிக் கொள்ளலாம். வேறு இடத்தில் நிலம் இல்லாதவர்கள், இந்தச் சான்றிதழை தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கொடுத்த பலர், இந்தச் சான்றிதழை விற்பனை செய்துள்ளனர். சி.எம்.டி.ஏ.,  டி.டி.சி.பி., போன்ற அமைப்புகள் இதற்கான சான்றிதழை வழங்குகின்றன.

தற்போதுள்ள விதிகளில், இந்த உரிமையை சம்பந்தப்பட்ட நகரத்துக்கு வெளியே பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. வளர்ச்சி உரிமை மாற்று சான்றிதழை நகரம் மாற்றி பயன்படுத்த அனுமதித்தால், இத்திட்டத்தில் பங்கேற்க பலரும் முன்வருவர் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, சென்னையில் அரசு திட்டத்துக்கு நிலம் கொடுத்த ஒருவர், அதற்கான வளர்ச்சி உரிமையை திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள தன் நிலத்தில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

இந்த விதி தளர்வு, நிலம் கையகப்படுத்துதல் நடைமுறையை எளிமையாக்குவதுடன், நிலத்தின் உரிமையாளர்களுக்கும், கட்டுமானத் துறைக்கும் பரவலான பலன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *