வாசிங்டன், அக்.21- உலகத் தமிழ் அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு தமிழுறவு மன்றம் வாசிங்டன் தமிழ் அமைப்புகள் சார்பில் பெரும் கவிக்கோ வாமு சேதுராமன் நினைவேந்தல் புகழ்மாலை – நிகழ்ச்சி 2 10 2025 வியாழன் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமெரிக்கா ஹோவர் கவுண்டிங் மத்திய நூலக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
மேலும் கலைஞர் காவியம், சேது காப்பியம், நோபல் தவம் ஆகிய மூன்று நூல்களின் மறு வெளியிடும் நடந்தது. வா.மு.சே. திருவள்ளுவர், வா.மு.சே.தமிழ் மணிகண்டன்,
வா.மு.சே. ஆண்டவர் ஆகியோர் பெருங்கவிக் கோவின் படத்தை திறந்து வைத்தனர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நினைவேந்தலுரை ஆற்றினார்.பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல் வரிசையில் எப்போதும் அமர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பவர் வா.மு.சேதுராமன், ஆசிரியரின் மீதும் அளவற்ற மதிப்பும் பேரன்பும் பூண்டவர் பெருங்கவிக்கோ என்று அவரைப் பற்றிய நினைவுகளை தமது உரையில், பதிவு செய்தார்.
மேரி லேண்ட் கோபால் குருசாமி, பேராசிரியர் அரசு செல்லையா, நாஞ்சில் பீட்டர், பாலா, சாமிநாதன் சுந்தர் குப்புசாமி, அய்சக் வல்லபாய் அகத்தியர் ஜான் பெனடிக், பாபு விநாயகம், இனியா ஆகியோர் நினைவுரை ஆற்றினர். டாக்டர் சோம. இளங்கோவன் காணொலி வழியே நினைவு உரையாற்றினார். தமிழின் கலங்கரை விளக்கமாக அமைந்தவர் பெருங்கவிக்கோ. அவரின் இலக்கிய பண்பாட்டு சமூக பணிகளின் ஒரு பகுதியாக மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகம் முழுவதும் பயணித்து பல்வேறு நாடுகளில் தமிழுக்கு உரிமையும், பெருமையும் சேர்த்தவர் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
முடிவில் வா.மு.சே.ஆண்டவர் தமிழ் மணிகண்டன் நன்றி
கூறினர்.