சிவகங்கையின் மாம்பட்டி கிராமத்தில் 1954-ஆம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. வறுமையால் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், தீபாவளிக்கும் கடன் வாங்கி, வறுமையில் சிக்கியுள்ளனர். இதிலிருந்து மீள, தீபாவளியை கொண்டாடாமல், பொங்கலை சிறப்பாக கொண்டாடலாம் என முடிவு செய்ய, அந்த வழக்கம் இன்றுவரை தொடருகிறது.