தமிழர் விழாவா தீபாவளி? தமிழர்களுக்கு எதிரான, அறிவுக்குப் பொருந்தாத ஆரியப் பண்டிகையான தீபாவளியை தமிழர்களே கொண்டாடாதீர்! என விழிப்புணர்வுத் துண்டறிக்கையை நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாகை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழக துணை செயலாளர் மு. இளமாறன், மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி ஆகியோர் ஈடுபட்டனர். (18.10.2025)

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் காஞ்சிபுரத்தில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (16.10.2025)
