தானும் கல்வி சிறந்து, சமூகமும் கல்வி சிறக்கக் கல்விக் கொடை நல்கிய தகைமைப் பண்பாளர் மு. கண்ணபிரான் 17.10.2025 அன்று மறைவுற்றார். அமெரிக்காவில் உள்ள தோழர் ரவிசங்கர் அவர்களின் தந்தையார் ஆவார்.
செய்தியறிந்தவுடன் அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ், மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பொருளாளர் வீ .குமரேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அன்புச்செல்வன், அச்சக மேலாளர் க. சரவணன், தோழர்கள் தங்கமணி, தங்க தனலட்சுமி, அரும்பாக்கம் தாமோதரன், லோகபிராம், புளியந்தோப்பு அஸ்வின், கு. அசோக்குமார், வே முத்துராஜ், கே.என். மகேஸ்வரன், க. கலைமணி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.
