தஞ்சை மாவட்ட கட்டடத் தொழிலாளரணி செயலாளர் மு.ரமேஷ் தந்தையும், திராவிடர் கழக மாத்தூர் கிளைக்கழக தலைவருமான, பெரியார் பெருந்தொண்டர் நா.முனியப்பன் அவர்கள் 18-10-2025 மதியம் மறைவுற்றார். இன்று 19-10-2025 மதியம் 12 மணியளவில் மாத்தூர் காமன் கோவில் தெரு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
வருந்துகிறோம்

திருநாகேஸ்வரம் பெரியார் பெருந்தொண்டர் ஜாதி ஒழிப்பு போராட்ட சட்ட எரிப்பு வீரர் அ.மொட்டையன் (வயது 96) அவர்கள் இன்று (19-10-2025) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் இறுதி நிகழ்ச்சிகள் இன்று (19-10-2025) மாலை 4.00 மணியளவில் தேவனார்விளாகம் காமராஜ் நகர் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: மொ.பாலகுரு (மகன்) 6384636182
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

கண்ணந்தங்குடி கீழையூர் கண்டைப்பிள்ளை தெரு மறைந்த இரா.தங்கவேல் அவர்களின் வாழ்விணையர் திராவிடர் கழக ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத்தலைவர் த.ஜெகநாதன் த.குமார் த.ரமேஷ் (அன்பு மெஸ், தஞ்சாவூர்) ஆகியோரின் தாயார் த.அம்சவள்ளி அம்மையார் 18.10.2025 அன்று மாலை மறைவுற்றார். என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி ஊர்வலம் 19.10.2025 (இன்று) மதியம் 12 மணியளவில் அம்மையாரின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்புக்கு: 9789655166, 9585654988, 9944690465, 9952848510
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் த.ெஜகநாதனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
