வல்லம், அக்.19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு Startup TN – Pre-incubation Centre நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பங்களை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தி பயிற்சிப் பட்டறைகள் மூலம் பயிற்சி அளித்தல், புதிய தொழில் முனைவோரை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.
10.10.2025 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற உலகப் புத்தொழில் மாநாட்டில் (Startup TN Global Startup Summit – 2025) உலகளவில் புத்தொழில் முனை
வோர் பங்கு கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். இவ்விழாவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் Pre-incubation Centre நிறுவுவதற்கு அனுமதி உத்தரவை தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழுவின் செயல் துணைத்தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் வழங்க இக்கல்லூரியின் சார்பாக இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் துணை
முதல்வர் முனைவர் ஜி.ரோஜா மற்றும் இயந் திரவியல் துறை பேராசிரியர் கே.கோபி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.