உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! சனாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் 16.10.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:-
வேலூர்
வேலூர், திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! நீதித்துறையை மிரட்டும் ஸனாதனவாதிகளின் யோக்கியதையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 16.10. 2025 அன்று காலை 10.30 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமை தாங்கினார், வேலூர் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி. எ.சிற்றரசன், வேலூர் மாவட்ட மேனாள் செயலாளர் கு.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.கலைமணி, சி.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் தொடக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவகுமார், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், வேலூர் மாவட்ட மகளிர் அணி ஜெ.சுமதி, நா.சுப்புலட்சுமி, திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வெ.அன்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா, மாவட்ட மகளிர் அணி ச.ஈஸ்வரி மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ.இந்திரா காந்தி மாவட்ட இளைஞரணி தலைவர் இ.தமிழ் தரணி, மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் க.சிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட ப.க அமைப்பாளர் மா.அழகிரி தாசன், மாநகர மேனாள் அமைப்பாளர் நெ.கி.சுப்பிரமணியன், மாவட்ட ப.க துணைத் தலைவர் பி.தனபால், குடியாத்தம் நகரத் தலைவர் சி.சாந்தகுமார், காட்பாடி நகரத் தலைவர் பொ.தயாளன், மாநகர மகளிர் அணி தலைவர் வீ.பொன்மொழி, பகுத்தறிவாளர் கழகம் ஆ.துரைசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.யுவன் சங்கர் ராஜா, திருப்பத்தூர் மாவட்டத் துணைத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன், நகரத் தலைவர் காளிதாஸ்,
மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன்பழகன், திருப்பத்தூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.கற்பகவல்லி, நகர மகளிர் அணி காப்பாளர் தாமரை, வாணியம்பாடி நகரத் தலைவர் வி.அன்பு சேரன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், சோலையார்பேட்டை நகரத் தலைவர் எஸ்.சிவகுமார், சோலையார்பேட்டை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட ப.க செயலாளர் கோ.திருப்பதி மாவட்ட இளைஞரணி தலைவர் சி.சுரேஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் க.முருகன், மாதனூர் ஒன்றிய தலைவர் மு.வெற்றி, அபூபக்கர், பிரேம்குமார், அஜித் குமார், ரத்தினவேல், ப.அன்பு, ராஜவேலு நாகப்பட்டினம், தி.க.சின்னதுரை, டில்லி, தீ.ஜெகதீசன், வேலூர் கங்காதரன், குப்புசாமி, ஓவியர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரன் நன்றி உரையாற்றினார்.
புதுச்சேரி
திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு, நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் கடுமையான மழையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனுடன் சேர்த்து புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களின் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
16.10.2025 அன்று காலை 10.30 மணியளவில் புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமை ஏற்றார். புதுச்சேரி திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் தி.இராசா, திண்டிவனம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இர.அன்பழகன், செயலாளர் தா.இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரியின் பல்வேறு பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இயக்கத்தின் தலைவர் பிராங்கலின் பிரான்சுவா, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இரா. முருகானந்தம், ஒடுக்கப்பட்டோர் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் தெ.வ. சிகாமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாணவரணி தலைவர் தமிழ்வாணன், திண்டிவனம் மாவட்டத் திராவிடர் கழகத் துணைச் செயலாளர் ஏ. பெருமாள், புதுச்சேரி தமிழர் களம் கே.அழகர், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சீ.சா.சுவாமிநாதன், பி. போல்டு தலைவர் அ.பஷீர் அகமது, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் இரா.மங்கையர் செல்வன் ஆகியோர் உரை நிகழ்த்தியதற்கு பின்னர் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கண்டன உரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் காப்பாளர்கள் இரா. சடகோபன், இர.இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் லோ. பழனி, விலாசினி ராசு, துணைத்தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ. சிவராசன், புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், இராம.சேகர், பெ.ஆதிநாராயணன், முகமது நிஜாம், இரா சீனுவாசன், அ.வீராசாமி, பிரான்சிஸ், லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில் மாவட்டக் காப்பாளர் செ.பரந்தாமன், மாவட்டத் துணை தலைவர் ச. அன்புக்கரசன், நகரத் தலைவர் உ. பச்சையப்பன், மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.இரமேஷ், மாநில இளைஞரணி துணைத் தலைவர் தா. தம்பி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுநல அமைப்பின் சார்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் காளிதாஸ், சிந்தனையாளர் பேரவை புலவர்.கோ. கலியபெருமாள்,தலித் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இராசா, பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.ச. தீனா, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் ஒருங்கிணைப்பாளர் நா. மலையாளத்தான், அண்ணா பேரவைத் தலைவர் சிவ. இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சேலம்
கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பி சேலம் மாவட்டக் கழகத் தலைவர் வீரமணி ராஜூ வரவேற்புரை ஆற்ற மேட்டூர் மாவட்ட காப்பாளர் பழனி புள்ளையண்ணன் தலைமையேற்று நடத்தினார்.
சேலம் மாவட்ட செயலாளர் மூணாங்கரடு சரவணன் சேலம் மாவட்ட துணை தலைவர் இமயவரம்பன் மேட்டூர் மாவட்ட ப.க தலைவர் கோவி அன்புமதி சேலம் மாநகர தலைவர் அரங்க இளவரசன் மேட்டூர் நகரத் தலைவர் இரா கலையரசன் எடப்பாடி நகரத் தலைவர் சா.ரவி சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர்த ச.கார்த்திக் சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை சக்திவேல் மேட்டூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கே கபிலன் மேட்டூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.சிறீதர் பொதுக்குழு உறுப்பினர் க.கமலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேட்டூர் மாவட்ட காப்பாளர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணி கண்டன உரை ஆற்றினார் மாநில மகளிரணி துணைச் செயலாளர் ப.காயத்ரி தொடக்க உரை ஆற்றினார்.
பின்னர் செயலவை தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி ஆர்ப்பாட்டக் கண்டன உரையில் பஞ்சமர் இழிலை ஒழியாமல் சூத்திரப்பட்டம் ஒழியாது.
எதை வலியுறுத்தி அன்று தந்தை பெரியார் அவர்கள் போராட்டத்தை நடத்தினாரோ அதே வழியில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியை இந்த ஸநாதன கும்பல் நீதித்துறையை மிரட்டும் ஆணவத்தை கண்டித்து இந்த தமிழ்நாடு முழுவதும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.
மேட்டூர் மாவட்ட கழக தலைவர் கா.நா.பாலு நன்றி கூறினர்.
சேலம் ராஜு பழ.பரமசிவம் போலீஸ் ராஜு மெய்ஞான அருள் டாக்டர் ராஜேந்திரன் ஆசைத்தம்பி சா குணசேகரன் கலையரசன் மகுடஞ்சாவடி ஆ.ச.இளவழகன் சி பூபதி வெண்ணந்தூர் செல்வகுமார் பருத்திக்காடு செல்வகுமார் அம்மாபேட்டை குமார் முதலியோர் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காரைக்குடி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து காரைக்குடி ராஜீவ்காந்தி சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமை வகித்தார். காரைக்குடி மாநகர தலைவர் ந.செகதீசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிவகங்கை மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், காரைக்குடி மாவட்ட தலைவர் ம.கு.வைகறை, காரைக்குடி மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, இராமநாதபுரம் மாவட்ட தலைவர் கா.மா.சிகாமணி, இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.முருகேசன், சிவகங்கை மாவட்ட செயலாளர் காளாப்பூர் பெ.ராஜாராம், சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் ச.அனந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழக மாநில கிராமப்பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார். இந்த நிகழ்வில் தி.மு.கழக பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், இராமநாதபுரம் மாவட்ட ப.க. அமைப்பாளர் பேரின்பம், காரைக்குடி மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன்,
தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி ஆ.சுப்பையா, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு, இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி, காரைக்குடி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் இள.நதியா, திலகவதி, காரைக்குடி மாவட்ட ப.க. ஆலோசகர் எஸ்.முழுமதி, மாவட்ட மாணவரணி தோழர் தொண்டி கோகுல், சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், இராமநாதபுரம் மாவட்ட ப.க. தோழர்கள் முஸ்தபா, ராஜ்குமார்,
இராமேசுவரம் நகர செயலாளர் சி.அறிவுச்செல்வம், மண்டபம் ஒன்றிய செயலாளர் சகாயம், தங்கச்சிமடம் நகர் தலைவர் ராயர், சித்தார் கோட்டை செயலாளர் கார்த்திக், இராமேசுவரம் மகளிரணி மஞ்சுளா, சிவகங்கை மாவட்ட ப.க. தோழர் ஓவியர் செல்லமுத்து மற்றும் ஏராளமான தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இறுதியில் காரைக்குடி மாநகர.துணைத்தலைவர் பழனிவேல் ராசன் நன்றி கூறினார்.
ஒசூர்
ஒசூர் உள்வட்ட சாலை தந்தை பெரியார் சதுக்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும்,நீதித்துறையை மிரட்டும் ஸ்நாதனவாதிகளின் சதியையும் கண்டித்து மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த வந்திருந்த அனைவரையும் கோ.திராவிடமணி வரவேற்றார் ஆர்ப்பாட்டத்தில் உச்ச நீதிமன்றம் நீதிபதிமீது செருப்பு வீசிய வழக்குரைஞரை கண்டித்தும் இதற்கெல்லாம் காரணமான ஸ்நாதன சித்தாந்தம் கொள்கை அது மக்கள் மனதைவிட்டு அகற்றபட வேண்டும் ஸ்நாதன கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் மக்கள் விரோதியாவார்கள் அவர்கள் ஒருபோதும் ஜனநாயக பாதையை விருப்ப மாட்டார்கள் என்று ஸநாதனவாதிகளை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள ஒசூர் உள்வட்ட சாலையில் தந்தைபெரியார் சதுக்க பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்ற திடீர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டனத்திற்குரியது அவர்களுக்கு ஒசூர் காவல்துறை துணைபோகும் செயலை கைவிட்டு சட்டபடி நடந்துகொள்ள வேண்டுமென மாவட்ட தலைவர் தனது தலைமை உரையில் பேசினார்.
இந் திமுக பகுத்தறிவு கலை இலக்கிய மாநில துணைச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் வெற்றி ஞானசேகரன், பகுதி செயலாளரும் துணை மேயர் ஆனந்தையா ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பின் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசுபெரியார் கண்டன சிறப்புரையாற்றினர் இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அசெ.செல்வம்,கோ.கண்மணி,இல.ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கோ.திராவிடமணி, செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட மகளிரணி தலைவர் சங்கீதா, மகளிர் பாசறை தலைவர் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் எழிலன்,செயசந்திரன், மாநகர தலைவர் து.ரமேஷ், செயலாளர் பெ.சின்னராசு, தொழிலாளர் டி மாவட்ட செயலாளர் தி.பாலகிருஷ்ணன்,பாவலர் கருமலைத்தமிழாழன் திமுக வட்ட செயலாளர்கள் அருள், வடிவேல்,சமுக நீதி வழக்குரைஞர்கள் பா,வெண்ணிலா க.கா.வெற்றி மாவட்ட இளைஞரணி தலைவர் டார்வினின் பேரறிவு, திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் க.கா.சித்தாந்தன் திமுக நாராயணன், ராணி, பார்த்திபன், ராமசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.ஆர்பாட்ட முழக்கம் அசெ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர் திராவிடர் கழகம் முடிவில் மாவட்ட செயலாளர் செ.பொன்முடி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
