கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்பட பாடல்களையும் தாண்டி அவரது இலக்கிய புத்தகங்கள், கவிதைகள், மற்ற படைப்பாற்றல்கள் இன்னும் ஏராளம். கலைஞர் தொலைக்காட்சியில் ‘‘உங்களுக்கு பெரியாரைப் பற்றி தெரிந்தால்’’ என்று பேசிய உரை அவர் ஓர் சிறந்த பேச்சாற்றலும் உடையவர் என உணர வைத்த தருணம் இது.
பெரியாரைப் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும்?
உன் உடம்பில் சிறகு முளைக்கும் தற்பெருமை பிறக்கும்
அறிவைத் தேடி வாழ்க்கை நகரும்
யாரையும் சார்ந்து இருப்பது வாழ்க்கை அல்ல; உங்களை சார்ந்திருப்பதே வாழ்க்கை என்பது புரியும்
மானம் ரத்தத்தில் சுரக்கும்
பகுத்தறிவு மூளையில் பதிவாகும்
அவர் இல்லா தமிழ்நாட்டு படை தலையில்லா கிரீடம் உயிரற்ற உடல்
தமிழ் படைப்பாளிகள் அன்று தமிழில் எழுதி னார்கள். ஆனால் பெரியார் தமிழையே எழுதினார். தமிழையே மாற்றினார்.
மற்றவர்கள் எழுதியதை தமிழர்கள் படித்தார்கள்; ஆனால் பெரியார் தமிழர்களையே படித்தார்.
என அழகு தமிழில் அற்புதமாக பேசிய உரை அனைத்தையும் முழுமையாக ரசிக்க Periyar Vision OTTஅய் காண தவறாதீர்கள்
– மு காசிலிங்கம்
மதுராந்தகம்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com
