கோவை மே 19 கோவை, செல்வ சிந்தாமணி குளத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 3 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் சனிக் கிழமை இடித்து அகற்றினர். கோவை மாநகராட்சியில் உள்ள குளங்களில் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், குளக்கரைகளில் ஆக்கிர மித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், கோயில்கள், மன்றங்கள் உள்ளிட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். தற்போது, கோவை, பேரூர் சாலையில் உள்ள செல்வசிந்தாமணி குளத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நடைபாதை, பூங்கா அமைத்தல், சிறுவர்களுக்கான விளையாட்டுக் கருவிகள் அமைத்தல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்காக குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த முனீஸ்வரன் கோயில், மதுரை வீரன் கோயில், அம்மன் கோயில் உள் ளிட்ட 5 கோயில்களை இடிக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப் பட்டு, கடந்த மாதத்தில் 2 கோயில்கள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து, மீதமுள்ள 3 கோயில்களை அகற்ற, மாநகராட்சி அதி காரிகள் பொக்லைன் இயந்திரத் துடன் அப்பகுதிக்கு சனிக்கிழமை சென்றனர். அப்போது, அப்பகுதி மக்கள் கோயில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களு டன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, 3 கோயில்களிலும் இருந்த சாமி சிலைகளை அகற்றி விட்டு, கோயில் கட்டடங்களை இடித்து அகற்றினர்.