திருச்சி, அக்.18- திருச்சியில் உள்ள கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா 11.10.2025 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மேனாள் மாணவ, மாணவிகளுக்கு இவ்விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கப்
பட்டன.
இந்நிகழ்ச்சியில், நடனத் துறையில் சிறந்து விளங்கும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடன ஆசிரியரும், அபிநயாஸ் நடனப் பள்ளியின் நிறுவனருமான ஆர். பிரான்சிட்டா அவர்களுக்கு, “கலைக் காவிரியின் முத்து – 2025” என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. நடனக் கலை வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் பிரான்சிட்டா, மாணவ, மாணவிகளுக்கு பாரதநாட்டியம், மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சிறந்த பயிற்சி அளித்து, பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் மாண வர்கள் வெற்றி பெற வழிகாட்டி வருகிறார்.
அவரது சிறப் பான பங்களிப்பு, மாணவர் களுக்கான ஊக்கு விப்பு மற்றும் கலைக்கான அர்ப்பணிப்பை பாராட்டி கலைக் காவிரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் இவ்விருது வழங்கப்பட்டது.
பிரான்சிட்டா வழிகாட்டுதலின் கீழ் பல மாணவர்கள் நடனத் துறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.
திருச்சி கல்வி மற்றும் கலை உலகில் பெருமையாகப் பேசப்படும் பிரான்சிட்டா அவர்களின் சாதனை, இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறது.
விருது பெற்ற பிரான்ஸிட்டா அவர் களுக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் மாணவர்கள், உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.