திருச்சி, அக்.18- ஃபோர்ட் சிட்டி சிலம்ப அமைப்பு தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்டக் கலை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய பன்னாட்டு சதுரங்கப் போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1.10.2025 முதல் 05.10.2025 ஆகிய அய்ந்து நாட்கள் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஜி. சிறீநிகா 13 வயதிற்குட் பட்டோருக்கானப் பிரிவில் பங்கேற்று, பன்னாட்டு அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவி சிறீநிகா வைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
பெரியார் கல்வி நிறுவன மாணவி பன்னாட்டு சதுரங்கப் போட்டியில் சாதனை

Leave a Comment