உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் விடியல் மிக மிக அவசியம். புலரும் பொழுது நமக்கு ஒரு மாற்றத்தை – ஏற்றத்தை தந்து விடாதா என்று எதிர்பார்த்து நிற்கின்றவர்களுக்கு கிழக்கு வெளுக்காதா, கீழ் வானம் சிவக்காதா, ‘நாள்தோறும் கிழக்கில் தோன்றும் உதய சூரியன் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கின்றது.
மூடநம்பிக்கைகள், பெண் அடிமைத்தனம், ஜாதி மத பேதங்கள், வர்ணாசிரம பிரிவுகள் என்ற காரிருளில் பயணித்துக் கொண்டிருந்த மக்களுக்கு ‘இருளை கிழிக்கின்ற கதிரவன் ஒளி போல தோன்றி புரட்சிப் பாதை’ அமைத்தவர் தான் தந்தை பெரியார். அவரின் செயல்களால் இன்று தமிழ்நாட்டு பெண்கள் ஏறத்தாழ 43 சதவீதம் ஏதாவது வருமானம் ஈட்டுகின்ற பணியில் இருந்து, இந்தியாவில் முதல் இடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் செய்திகளை பார்க்கிறோம். அந்த வரிசையில் பெரியார் நூலக புத்தகக் காட்சிக்கு வருகை தந்திருந்த இரு பெண்களின் கருத்துகள் உள்ளத்திலிருந்து தாமாக வெளிவந்தவை. பெரியார் மட்டும் இல்லை என்றால்… நாங்கள் சுதந்திரம் இல்லாமல் எங்களின் தந்தைகளுக்கும், கணவர்களுக்கும் அடிமைத்தனமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இருந்து வந்து இருப்போம். ஆனால் இன்று பொதுவெளியில் புதுமைப் பெண்களாக சுதந்திரமாக உலா வருவதற்கு தந்தை பெரியாரே காரணம். பெரியார் கிழவர் அல்ல: பெண்களின் கிழக்கு திசை’ என்று முத்தாய்ப்பாய் பேசி முடித்த கருத்துகள் Periyar Vision OTT இல் வெளியாகி உள்ளது. இன்றே காணுங்கள்
எம்.சங்கர வடிவு
பெரம்பலூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com