சென்னை, அக். 17- இந்திய அஞ்சல் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) பாலிசிகளை மக்களிடம் கொண்டு செல்ல பல புதிய முயற்சிகளை அஞ்சல் துறை எடுத்து வருகிறது.
எனவே இச்செயல்பாட்டிற்கு இளைஞர்கள், சுய தொழில் முனைவோர்கள் அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர்களின் திறமையைப் பயன்படுத்தி மக்களிடம் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்லலாம் என திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கான நேர்காணல் நடைபெறவுள்ளது.
நேர்காணல் நடைபெறும் விவரங்கள்:
நாள்: 23.10.2025
நேரம்: பிற்பகல் 03.00 மணி
இடம்:அண்ணாநகர் துணை அஞ்சலகம் (Anna Nagar Sub Post Office – அண்ணா நகர் கோபுரம் மெட்ரோ நிலையம் அருகில்), சென்னை-600 040.
தேவையான அடிப்படைத் தகுதிகள்:
கல்வித் தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது மற்றும் அதற்கு மேல்.
நேர்காணலுக்கு வருவோர் கவனத்திற்கு:
இந்த நேர்காணலில் பங்கேற்க விருப்பம் உடையவர்கள் மூன்று பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்கள், அசல் மற்றும் இரண்டு நகல்களுடன் வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.
இந்த வாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை (தொடர்பு எண்: 044-28273635/8925942925) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை வடகோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.லட்சுமணன் பிள்ளை தெரிவித்துள்ளார்.