திருச்சி, அக். 17- சிலம்பம் உலக சம்மேளனம் அமைப்பு, பன்னாட்டு விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வி அமைப்பு, அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) மற்றும் உலக சுகாதாரக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து பன்னாட்டு அளவிலான சிலம்பக் கலைஞர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, திருச்சி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் கடந்த 28.09.2025ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எஸ்.கனிஷ்கா எம்.அர்ஷத், வி.எஸ்.சியாம், ஆர்.ரேஷ்ணவி, என்.முகமது ரயான், எம்.கார்த்திகேயா, எம்.பரமேஸ் ஹரிப்ரியன், எஸ்.இனியன், ஆர்.ராஜ்சிறீ, எம்.முருகானந்தம், ஏ.முகமது அக்ரம், ஜி.அஜைப் முகமது, எஸ்.ப்ரஜன், எம்.பிரணவ் மிதுன் ஆகியோர் மஞ்சள் நிற பட்டையுடன் (Yellow Belt) கூடிய பட்டயச் சான்றிதழும், பி.ஆர்.மோகிதா, சி.அரிகரன், எம்.ஹர்ஷிதா, பி.சாந்தினி, ஆகியோர் ஆரஞ்சு நிறப் பட்டையுடன் கூடிய பட்டயச் சான்றிதழும் ஏ.தேவதர்ஷன், ஏ.தேவாமிகா மற்றும் ஆர்.கவின் குமார் ஆகியோர் பச்சை நிறப் பட்டையுடன் (Green Belt) கூடிய பட்டயச் சான்றிதழும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தப் பட்டயச் சான்றிதழ்கள் பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பால் முறையாக அங்கீகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் இச் சாதனை முயற்சியைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் ஆகியோர் வாழ்த்தி, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.