உலகப் புகழ் பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய உரையை ‘தண்டனை கொடுத்த அதிகாரிக்கு மரியாதை’ என்று தலைப்பிட்டு Periyar Vision OTT பதிவு செய்து வெளியிட்டு உள்ளது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையில் – கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்க்கை பற்றியும், பெருந்தன்மை பற்றியும் இங்கே பேசினார். 1994 இல் விடுதலைக்குப் பிறகு அதிபராக பொறுப்பேற்ற போது உதவி தலைவராக வெள்ளையர் டி பிளாக் என்பவரையும் மண்டேலா நியமித்துள்ளார். தனது பதவியேற்பு விழாவிற்கு தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது அங்கு தன்னை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கிய சிறை அதிகாரிகளையும் அழைத்திருந்தது ஓர் அதிசயம். அவருடைய சிறை வாழ்க்கை சாதாரணமானது அல்ல. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுண்ணாம்பு பாறையை உடைக்கின்ற வேலை. மண்டேலா அவர்களின் பார்வை மங்கிப் போனதற்கும் இதுவே காரணம். எப்படி தந்தை பெரியார் எப்படி பெல்லாரி சிறையில் கல் உடைக்கும் வேலையில் துன்புறுத்தப்பட்டாரோ அதைவிட மேலாக பல துன்பங்களை அனுபவித்து வெளியில் வந்தவர் தான் மண்டேலா அவர்கள். அவர் சிறை செல்லும் முன்னர் ஆற்றிய உரையில் ‘வெள்ளையர்களின் ஆதிக்கத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம் கருப்பின மக்களின் ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. சமதர்மமே நமது கோட்பாடு’ என்று பேசியது மிகவும் புகழ்பெற்றது என்று குறிப்பிட்டு மேலும் பல நல்ல தகவல்களை வழங்கிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் சிறப்பான உரையை பெரியார் வலைதள காணொலி காட்சி அரங்கில் காணலாம்
- செல்வரத்தினம்
கொடைக்கானல்.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com