இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத் தீவை மீட்கவும் – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை உடனே விடுவிக்கவும் அழுத்தம் தருக! பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய கடிதம்

சென்னை, அக். 17- இலங்­கை­யி­ட­மி­ருந்து கச்­சத் தீவை மீட்­க­வும்,இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரால் சிறை­பி­டிக்­கப்­பட்ட மீன­வர்­க­ளை­யும், அவர்­க­ளது மீன்­பி­டிப் பட­கு­க­ளை­யும் உட­ன­டி­யாக விடு­விக்­க­வும், கூட்­டுப்­ப­ணிக் குழுவை மீண்­டும் புதுப்­பிக்­க­வும். இந்­தி­யா­விற்கு வருகை புரிந்­துள்ள இலங்கை பிர­த­மர் அவர்­களை வலி­யு­றுத்­திட வேண்டி இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­க­ளுக்கு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் கடி­தம்  நேற்று (16.10.2025) எழு­தி­யுள்­ளார்.

இது குறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்   அக்­க­டி­தத்­தில், இலங்கை பிர­த­மர் அவர்­க­ளின் மூன்று நாள் புதுடில்லி­லிப் பய­ணம் அக்­டோ­பர் 16-18, 2025 அன்று திட்­ட­மி­டப்­பட்­டு ள்­ளதை குறிப்­பிட்­டுள்ள முத­ல­மைச்­சர், இந்­தப் பய­ணம், பாக் விரி­கு­டா­வின் பாரம்­ப­ரிய மீன்­பிடி கடல் பகு­தி­யில் இந்­திய மீன­வர்­கள் எதிர்­கொள்­ளும் தொடர்ச்­சி­யான பிரச்­சினை­களை தீர்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்­கி­யுள்­ள­தாக தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

தொடர் தாக்குதல்

இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் தொடர்ந்து நடை­பெ­றும் தாக்­கு­தல்­கள், துன்­பு­றுத்­தல்­கள் மற்­றும் அச்­சு­றுத்­தல்­கள் கார­ண­மாக தமிழ்நாட்டு மீனவ சமூ­கங்­கள் தொடர்ந்து துன்­பங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர் என்று குறிப்­பிட்­டுள்ள முத­ல­மைச்­சர் அவர்­கள், 2021 முதல், 106வெவ்­வேறு சம்­ப­வங்­க­ளில் 1,482 மீன­வர்­க­ளும் 198 மீன்­பி­டிப் பட­கு­க­ளும் சிறைப் பிடிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­ வும், இத­னால் மீன­வர்­கள் பெரும் துய­ரத்­தை­யும் பொரு­ளா­தார இழப்­பை­யும் எதிர்­கொண்­டுள்­ள­தாக தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தப் பிரச்­சி­னை­க­ளைத் தூத­ரக நட­வ­டிக்­கை­கள் மூலம் தீர்க்க இந்­திய அர­சின் தலை­யீட்டை தமிழ்­நாடு அரசு தொடர்ந்து கோரி வரு­வ­தா­க­வும், இதற்­காக, தான் பதி­னொரு முறை பிர­த­மர் அவர்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ள­தை­யும், ஒன்­றிய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு 72 முறை கடி­தம் எழு­தி­யுள்­ள­தை­யும் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

இந்­தச் சிறைப்­பி­டிப்பு மற்­றும் தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­வ­தால், இந்த கீழ்­கண்ட முக்­கி­ய­மான பிரச்­சி­னை­கள் குறித்து இலங்­கைப் பிர­த­ம­ரின் வரு­கை­யின் போது விவா­திக்­கப்­பட வேண்­டும் என்று தனது கடி­தத்­தில் முத­ல­மைச்­சர் அவர்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

கச்­சத்­தீவு மீட்பு:

தமிழ்­நாட்டு மீன­வர்­கள் பாரம்­ப­ரி­ய­மாக இந்­தி­யா­வின் ஒரு பகு­தி­யாக இருந்த கச்­சத்­தீ­வைச் சுற்­றி­யுள்ள கடல் பகு­தி­யில் மீன்­பி­டித்து வரு­கின்­ற­னர். இந்­தத் தீவு ஒன்­றிய அர­சால் மாநில அர­சின் முறை­யான ஒப்­பு­த­லைப் பெறா­மல் இலங்­கைக்கு மாற்­றப்­பட்­டது – இந்த முடிவை 1974 முதல் தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் தொடர்ந்து எதிர்த்து வரு­கி­றது. இதன் விளை­வாக, நமது மீன­வர்­கள் இப்­போது தங்­கள் பாரம்­ப­ரிய மீன்­பி­டித் தளங்­க­ளுக்­குள் செல்­வ­தற்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­டு­வ­து­டன், அத்­து­மீறி நுழை­வ­தா­கக் கூறி அடிக்­கடி துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

இந்­தச் சூழ்­நி­லை­யில், கச்­சத்­தீவை மீட்­ப­தற்­கும், பாக் விரி­குடா பகு­தி­யில் உள்ள நமது மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தற்­கும், இந்­தி­யா­விற்கு வருகை தரும் இலங்கை பிர­த­மர் அவர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­திட இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென்­றும், மீனவ சமூ­கம் எதிர்­கொள்­ளும் நீண்­ட­கால மற்­றும் துய­ர­மான பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க இது மிக­வும் முக்­கி­ய­மா­ன­து­ மா­கும் என்று தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

பட­கு­களை உட­ன­டி­யாக விடு­வித்­தல்:

தற்­போது, தமிழ்­நாட்­டைச் சேர்ந்த 76 மீன­வர்­க­ளும் 242 மீன்­பிடி பட­கு­க­ளும் இலங்கை வசம் உள்ள நிலை­யில், பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­கள் எதிர்­கொள்­ளும் துய­ரத்­தைத் தணிக்க, அவர்­களை விரை­வா­கத் தாய­கம் திரும்­ப­வும், அவர்­க­ளின் பட­கு­களை இலங்கை அர­சி­ட­மி­ருந்து விடு­விக்­க­வும் உரிய அழுத்­தம் கொடுக்க வேண்­டு­மென்­றும் தனது கடி­தத்­தில் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

கொள்ளைகளை
தடுத்­தல்:

இந்­திய மீன­வர்­கள் தங்­கள் மீன்­பிடி உப­க­ர­ணங்­கள் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­வ­தை­யும், இலங்கை நாட்­டி­ன­ரால் அடிக்­கடி நடத்­தப்­ப­டும் தாக்­கு­தல்­கள் மற்­றும் திருட்­டுச் சம்­ப­வங்­கள் குறித்­தும் புகார் அளிப்­ப­தா­க­வும், இந்­தப் பிரச்­சி­னையை திறம்­பட தீர்க்க மேம்­ப­டுத்­தப்­பட்ட இரு­த­ரப்பு பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு மற்­றும் நிலை­யான தூத­ரக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

 மீன்­பி­டிப்பட­கு­களை தேசி­ய­ம­ய­மாக்­கி­ய­தன் தாக்­கம்

இலங்கை மீன்­பி­டிச் சட்­டத்­தில் 2018 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­தம், பறி­மு­தல் செய்­யப்­பட்ட இந்­திய மீன்­பி­டிப் பட­கு­களை தேசி­ய­ம­ய­மாக்க வழி­வ­குத்­துள்­ளால் அவற்றை மீட்­டெ­டுப்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கி­விட்­டது. இது பாதிக்­கப்­பட்ட மீன­வர்­க­ளுக்கு கடு­மை­யான நிதி நெருக்­க­டி­யை­யும் வாழ்­வா­தார இழப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­றும் மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் நிரந்­த­ர­மாக பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­பதை உறுதி செய்ய இந்­தப் பிரச்­சி­னையை இலங்கை பிர­த­ம­ரி­டம் வலி­யு­றுத்த வேண்­டும் என்­றும் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

புத்­து­யிர் அளித்­தல்:

மேற்­கு­றிப்­பிட்­டுள்ள இரு­த­ரப்பு பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­காக நிறு­வப்­பட்ட மீன்­வ­ளத்­திற்­கான கூட்­டுப் பணிக்­குழு, சமீ­பத்­திய ஆண்­டு­க­ளில் தொடர்ந்து கூட்­டப்­ப­டு­வ­தில்லை. எனவே, இரு நாடு­க­ளைச் சேர்ந்த மீன­வர்­க­ளின் கவ­லை­களை, நிலை­யான மற்­றும் ஒருங்­கி­ணைந்த முறை­யில் நிவர்த்தி செய்­வ­தற்­கான ஒரு கட்­ட­மைக்­கப்­பட்ட தளத்தை உரு­வாக்க இந்த வழி­மு­றையை மீண்­டும் புதுப்­பிப்­பது அவ­சி­ய­மா­கும் என்­றும் தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தப் பிரச்­சி­னை­க­ளி­னால் ஏற்­ப­டும் மனித மற்­றும் பொரு­ளா­தார பாதிப்­பு­க­ளைக் கருத்­தில் கொண்டு, தொடர்ச்­சி­யான தூத­ரக நட­வ­டிக்­கை­கள் மூலம் விரை­வான மற்­றும் நீடித்­தத் தீர்வை அடை­யும் நோக்­கில், இவற்றை இலங்கை பிர­த­மர் அவர்­க­ளி­டம் எடுத்­துச் சென்று விவா­திக்க வேண்­டும். இவ்­வாறு பிர­த­மர் அவர்­க­ளுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில்முத­ல­மைச்­சர் அவர்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *