திருச்சி, அக். 15 லால்குடி கழக மாவட்டம், பெருவளப்பூரில் கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
கு.காயத்ரி வரவேற்புரையாற்றினார். சா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர் டென்ஸி உரையாற்றினார்.
லால்குடி மாவட்ட தலைவர் ரா.வால் டேர், மகளிர் அணி குழந்தை தெரசா, மாவட்ட காப்பாளர் ஆல்பர்ட், மாவட்ட துணை தலைவர் ஆசைத்தம்பி,மாவட்ட துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன் மற்றும் பெரம்பலூர், துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி கழக தோழர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.. நிறைவாக இரா.கவுதம் நன்றி கூறினார்.