சென்னை, அக்.14- ‘பள்ளமில்லா சாலைகள்’, ‘பாதுகாப்பான பயணம்’, ‘விபத்தில்லா ‘தமிழ்நாடு’ என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத்துறையை வழிநடத்திச் செல்வதே முதலமைச்சரின் கனவாகும்’ என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
பள்ளமில்லா சாலை
சென்னை கிண்டியில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆணைய கூட்டரங்கில், வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று (13.10.2025) நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசிய தாவது:-
பள்ளம் இல்லா சாலை களை உருவாக்கும் விதமாக நம்மசாலை’ என்ற செயலியை துணை முதலமைச்சர் மூலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இச்செயலி விரைவில் புதிய வடிவத்துடன் செயல்பாட்டுக்கு வர உள்ளது. செயலியில் எந்த புகாரும் வராத வண்ணம் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
‘பேட்ச் பிரீ சாலை’ எனப்படும் பள்ளம் இல்லா சாலைகளை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண் டுவருவது பொறியாளர்களின் தலையாய கடமையாகும். அடுத்த 3 மாதங்கள் பருவ மழை பெய்யும் மாதங்களாகும். எனவே பொறியாளர்கள், சாலை பணியாளர்களை பயன்படுத்தி, தேவையான நட வடிக்கைகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளநீர் தடுப்பு பணிகள்
அனைத்து பாலங்களிலும் உள்ள நீர் வழிப்பாதைகள் சீர் செய்யப்பட வேண்டும்.அதில் உள்ள சிறு செடிகள் போன்றவை அகற்றவேண்டும். வெள்ளநீர் வழிந்து ஓட வழி செய்ய வேண்டும். மழைநீர் கால்வாய்களில் உள்ள காடுகள் அகற்றப் பட்டு வெள்ளநீர் விரைவாக வழிந்து ஓட செய்ய வேண்டும். பல ஆய்வுக் கூட்டங்களில் பொறியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங் கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை அளவைவிட அதிகமாக பெய்யும் என கணிக்கப்பட்டிருப்பதால் அனைத்து வெள்ளநீர் தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் கோட்ட பொறியாளர்களும் மேற்கொண்டிருக்கவேண்டும். பணிகள் விடுப்பட்டிருந்தால் உடனடியாக பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக் டர் இரா.செல்வராஜ், நெடுஞ் சாலைத்துறை திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.